திருவரங்கா! உனை வழிபடும் போதினில் ...
திருவரங்கா! உனை வழிபடும் போதினில் தர்மவர்மாவுடனே
அருந்தவ ரிஷிகளும், மாந்தரும் அங்கே ஒருங்கே திரண்டிட்டுன்
திருத்தரிசனங்கள் கண்டே உவகையும் பொங்கியே துதித்தார்கள்!
ஒரு சிறுகாலம் அனைவரும் அரங்கா! உந்தன் தரிசனத்தைத்
திருநகர் இதிலே கண்டே துதிக்க ஆசைமிகக்கொளவே
அருளாளர் அத்தர்மவர்மாவும் வீடணன் அவனிடமே
ஒரு பணிவோடு அதனைச் சொல்லியே அவன் அனுமதியோடு
திருப்பிரம்மோத்ஸவம் நடத்தியே உகந்தான்! பின்னர் வீடணனும்
பெருமானே! உனை விமானத்துடனே எடுக்கவே முயன்றிட்டுன்
திருச்சங்கல்ப்பத்தால் இயலாமல் போயிட அவன் வருத்தத்
திருப்பங்குனியில் ரோஹிணி நண்பகல் அபிஜித் முகூர்த்தத்தில்
திருவரங்கத்தே திருப்பிரதிட்டை ஆனாய் அரங்கசோ!
– (108 / 52 – 54)
(திரு ஆர்.வீ.ஸ்வாமியின் திவ்யதேச மணிமாலையிலிருந்து)