Monday, March 14, 2005

திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை - 1

மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்ஙும்
போதில்வை த்த தேன்சொரியும் புனலரங்ஙம் என்பதுவே 1.

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தைய் அளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்ஙம் என்பதுவே. 2.

மருமகன் தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய்ச் செங்ஙமலம் திருநிறமாய்க் கருஙுவளை
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்ஙம் என்பதுவே. 3.

கூன் தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்ஙொழிய
கான் தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்ஙம் என்பதுவே. 4.

பெருவரங்ஙள் அவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரஙப் பொருதழித்து இவ்வுலகினைக் கண்பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்ஙலரக் குயில்கூவும் குளிர் பொழில்சூழ்
திருவரஙம் என்பதுவே என் திருமால் சேர்விடமே. 5.

கீழுலகில் அசுரர் களைக் கிழஙிருந்து கிளராமே
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழைமடல் ஊடுரின்சித் தவளவண்ணப் பொடியணிந்து
யாழின் இசை வண்டினங்ஙள் ஆளம்வைக்கும் அரங்ஙமே. 6.

கொழுப்புடைய செழுஙுருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர் களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்ஙள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்ஙமே. 7.

வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இருங்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி
மல்லிகை வெண்சஙூதும் மதிளரங்ஙம் என்பதுவே. 8.

குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றூடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்ஙம் என்பதுவே. 9.

பருவரங்கள் அவைபற்றிப் படையாலித் தெழுந்தானை
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு
இருவரஙம் எரித்தானை ஏத்தவல்லார் அடியோமே. 10.

Tuesday, March 01, 2005

அரங்கனின் மேனி நிறம்

It is interesting to find from our scriptures that the Creator of all colors is Himself extremely colorful. He is said to sport on various occasions. To start our colorful journey with the Vedas, the Purusha SUkta describes the Lord as being the color of the Sun-

Aditya varNam tamasa: parastAt.

The reference to Sun-color is significant. Just as the Sun is the antithesis of all darkness or evil, so too the Paramatma is verily the abode of all good qualities, and the antithesis of all that is inauspicious

akhila hEya pratyanIka, kalyAnaikatAna.

Describing the TirumEni of the ParamaPurusha, the ChAndOgya Upanishad has the following to say-

Ya EshOntar AdityE hiraNmaya:Purusha:drisyatE
HiraNmaya:smashru:hiranya kEsa:AprNakhAt sarva Eva suvarNa:


The Lord is seen in golden splendour amidst the Solar System, adorned by golden hair with a golden moustache and facial hair to match. From head to toe, he is all glitter like the Yellow metal.

It is perhaps this wonderful tirumEni that Sri PeyAzhwar was able to witness at TirukkOilUr on that stormy night, which is evident from his exclamation,

திரு கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிரமும் கண்டேன்.

Though Sri Nammazhwar too endows the Lord with the color of red gold,

"செம்பொன்னே திகழும் திருமூர்த்தியை"

He himself turns around later and takes objection to the Lord’s color being compared to that of a mere metal, and says that the purest gold cannot match the glitter of the Lord’s tirumEni-

சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது.

At the other end of the spectrum, Emperuman sports a jet-black color too, as opposed to the sparkling golden hue indicated in the Vedas. Especially in Sri KrishnAvatAra, He is a blackie, as almost all the
Azhwars testify-

கண்ணன் எனும் கரும் தெய்வம்
கரிய மேனி மிசை வெளிய நீரு சிறிதே இடும் பெரிய கோல தடம் கண்ணன்
கரு மாமுகில் போல் வண்ணன் கண்ணன்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
கார் திறள் அனய மேனி கண்ணனே உன்னை


Thus the Lord is credited with the color of clouds and the black sea-

காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்ஞமும்(Siriya Tirumadal)

It is significant to note that the very name Krishna denotes one who is black. Perhaps He was christened with this name, looking to His color at birth. He is indeed a Black Diamond, says Sri Nammazhwar-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே.

Sri Andal goes a step further and, in a damaging expose, reveals that Sri Krishna’s heart is as black as His body-

புறம் போல் உள்ளம் கரியானை.

That the Lord sports the color of blue-black clouds is evident from Sri Vishnu Sahasranamam too, the prelude to which says,

MEgha shyAmam peetha kousEya vAsam.
On this black body, the attire of yellow silk sits well.

Not only Sri Krishna, but Sri Rama too sported the color of black clouds-RAmam indIvara syAmam.
Another color that the Lord sports, is green- a green that is restful to the eyes, says Sri Tondaradippodi Azhwar. He sings of Ranganathar in Srirangam:

பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமல செங்கண்
அச்சுதா! அமரர் ஏரே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்.
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்ஙமா நகருளானே!.


Thanks: www.ramanuja.org

Thursday, February 24, 2005

துப்புடையாரை

Periaazhvaar expresses a fear that during the stressful time of his life passing from his body he may forget to think of the Lord, and therefore he says he wishes to surrender to the Lord right away without any delay.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைன்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
ஏய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்ஙத்தரவணைப் பள்ளியானே!

Wednesday, February 23, 2005

ஏன் பள்ளி கொண்டீரய்யா?

ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா
ஏன் பள்ளி கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கநாதா…

ஆம்பல் பூத்தசய பருவதமடுவிலே 
அவதரித்த இரண்டாற்று நடுவிலே ||


கௌசிகன் சொல் குறித்ததற்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்ததற்கோ
ஈசன் வில்லை முறித்ததற்கோ 
பரசுராமன் முரம் பறித்ததற்கோ ||

மாசிலாத மிதிலேசன் பெண்ணுன்னுடனே வழிநடந்த இளைப்போ? 
தூசில்லாத குகன்னோடதிலே கங்கை துறை கடந்த இளைப்போ? 
மீஷுரமாம் சித்ரா கூட சிகரம் தனில் மிசை நடந்த இளைப்போ? 
காஷினிமேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ? 
ஓடி களைத்தோ தேவியை தேடி இளைத்தோ
மரங்கள் ஏழும் துளைத்தோ கடலை கட்டி வளைத்தோ 
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ? 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ ||

மதுரையிலே வரும் களையோ? முதலைவாய் மகனைத் தரும் களையோ?
எதிர் எருதை பெரும் களையோ? கன்றை எடுத்தெறிந்த பெரும் களையோ?
புதுவையான முலையுண்டு பேயினுயிர் போக்கியலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாகியலுத்தீரோ 
துதிசை ஆயர்களை காக்கவேண்டி மலை தூக்கி அலுத்தீரோ 
கதிசை காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கியலுத்தீரோ
மருதம் சாய்த்தோ? ஆடுமாடுகள் மேய்தோ?
சகடுருளை தெய்தோ கம்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர்விடுத்த வருத்தமோ? 
போரிலே சக்கரம் எடுத்த வருத்தமோ? ||

Composer: அருணாசல கவி
https://www.youtube.com/watch?v=O6CtnHbn46A

Tuesday, February 22, 2005

மஞ்ஞனமாட்டல் 6-10

எண்ணெய்க்குடத்தை உருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே!
உண்ணக்கனிகள்தருவேன் ஒலிகடலோதண்ணீர் போலே
வண்ணம் அழகியன் அம்பே! மஞ்ஞனமாட நீவாராய்.

O Lord with the beautiful blue complexion of the waters of the ocean with noisy waves ! O Swami who kicks the oil containing vessels around with Your tender legs and who wakes up sleeping children with Your pinching ! I will give You sweet , hand-picked fruits . Please come here and take Your bath without further delay !

கறன்தனற்பாலும் தயிரும் கடைன்து உறிமேல்வைத்தவெண்ணெய்
பிறன்ததுவேமுதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!
சிறன்தனற்றாய் அலர் தோற்றும் என்பதனால் பிறர்முன்னே
மறன்தும் உரையாடமாட்டேன் மஞ்ஞனமாட நீவாராய்.

O My Lord ! From the day You were born , I have not seen the likes of either milk or curds or the butter stored in the pots hanging from the ceiling . You have taken care of all of that ! If I started to criticize You in front of others , they will be astonished at me as the mother complaining about the child that I bore ! Hence , I am hesitant to criticize You because of fear about offending my neighbors . I will never belittle You in front of others . Please come here and take Your bath !

கன்றினை வாலோலைகட்டிக் கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின் திறத்தேனல்லன்னம்பே! நீபிறன்ததிரு நல் நாளன்று
நீ நீராடவேண்டும் நாரயணா! ஓடாதேவாராய்.

O Lord of total perfection ! I can not fully comprehend Your limitless , auspicious attributes ( anantha kalyANa guNams ) or Your power . One day , You tied the ribbons on the tail of the asuran , who took the form of a calf to kill You . What did You do ? You took that calf by the tail , swirled him around and threw him at a wood apple tree . The fruits fell as a result of that impact and provided a feast for Your play mates . Thereafter , You went to the banks of YamunA river and got on the top of the hoods of the poisonous KaaLingan and danced there to Your heart's content and subdued the serpent's arrogance . Today happens to be the day of Your birth . Therefore You must take an enjoyable bath . O NaaraNA ! Please come hither! Do n't run away .

பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைன்த பொன்மேனி
காணப்பெரிதும் உகப்பன் ஆகிலும்கண்டார் பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னைகாணில் சிரிக்கும்
மாணிக்கமே! என்மணியே! மஞ்ஞனமாட நீவாராய்.

O Lord without any modesty ! My mANikkam ! My blue sapphire ! I enjoy seeing your beautiful limbs covered with dirt from Your entering the cow sheds and playing in the mud there . But , those who see Your body smeared with all that dirt blame me and call me an uncaring mother . O shameless Lord who puts me in such a dire spot ! Nappinnai will laugh at You , if she sees You in this state. Let me help You . Please come here and cleanse Yourself with the lovely bath that I have prepared for You .

கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்ஞனமாட்டியவாற்றை
பார்மலிதோல்புதுவைக்கோன் பட்டர்பிரான் சொன்னபாடல்
சேர்மலிசென்தமிழ்வல்லார் தேவினையாதுமிலரே

Those who recite these ten paasurams composed by PeriyAzhwAr--, the elder of the most ancient land known as Sri VillipputthUr -- on the way in which the full-breasted YasOdhA pirAtti bathed her son , KaNNapirAn of complexion far more beautiful than the clouds of the rainy season , will become completely free of any sins .

Thursday, February 10, 2005

மஞ்ஞனமாட்டல் 5

அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்பட நான் சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்னம்பே!
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும் சோத்தம்பிரான்! இங்கேவாராய்.

O Lord of full perfection ! O my Swami ! My salutations to You . Please come here . Young girls with tender breasts will complain behind my back about Your minor offenses and laugh over them . While they are busy that way , I have been busy dissolving cubes of jaggery in milk and flour to cook sweet tasting appam and other delicious luncheon items for You . If You want this lovely lunch , You must take a bath first. Please come and have Your delightful bath .

Wednesday, February 09, 2005

மஞ்ஞனமாட்டல் 4

கஞ்ஞன் புணர்ப்பினில்வந்த கடியசகடம் உதைத்து
வஞ்ஞகப்பேய்மகள் துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!
மன்சளும் செஞ்கழுனீரின் வாசிகையும் நறுசான்தும்
அன்சனமும் கொண்டுவைத்தேன் அழகனே! நீராடவாராய்.

O great helper , who destroyed the asuran in the form of the wheel sent by Your evil uncle Kamsan with a swift kick of Your tender feet ! O Lord, who sucked the life out of the deceitful PUthanai ! I have added turmeric powder , and enriched Your bath water with petals of red lotus flowers . I have set aside fragrant sandal paste and black collyerium for decorating Your eyes after Your bath . O Beautiful One ! Please do not run away from me .Come and take Your bath with further hassle !